நில ஆக்கிரமிப்பு வழக்கில் கவர்னருக்கு சம்மன் அனுப்பிய மாஜிஸ்திரேட்டு சஸ்பெண்ட்

அரசியல் சாசன பதவி வகிக்கும் கவர்னருக்கு சம்மன் அனுப்பப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது.;

Update:2023-11-03 08:18 IST

ஆனந்தி பென் படேல்

படான்,

உத்தரபிரதேசத்தின் படான் மாவட்டத்தில் நில ஆக்கிரமிப்பு வழக்கு ஒன்றை துணை மண்டல மாஜிஸ்திரேட்டு வினீத் குமார் விசாரித்தார். இந்த வழக்கில் அம்மாநில கவர்னர் ஆனந்தி பென் படேலையும் சேர்த்து அவருக்கு சம்மன் அனுப்பினார். இந்த வழக்கு தொடர்பாக கவர்னர் கோர்ட்டில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறும் அதில் உத்தரவிட்டு இருந்தார்.

அரசியல் சாசன பதவி வகிக்கும் கவர்னருக்கு சம்மன் அனுப்பப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் கவர்னர் மாளிகை தரப்பில் மாவட்ட நீதிபதி மனோஜ் குமாருக்கு கடிதம் அனுப்பப்பட்டது.

அரசியல் சாசன பதவி வகிக்கும் கவர்னருக்கு நோட்டீசோ, சம்மனோ அனுப்ப முடியாது என்பதும் அதில் சுட்டிக்காட்டப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து துணை மண்டல மாஜிஸ்திரேட்டு வினீத் குமாரை மாவட்ட நீதிபதி மனோஜ் குமார் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்