விநாயகர் சதுர்த்தி பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

ஆண்டர்சன் பேட்டையில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை அப்பகுதி மக்கள் கோலாகலமாக கொண்டாடினாா்கள்.

Update: 2023-09-19 18:45 GMT

கோலார் தங்கயவல்

நாடுமுழுவதும் நேற்றுமுன்தினம் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்பட்டது. இதேபோல் கோலார் மாவட்டத்திலும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

கோலார் மாவட்டம் கோலார் தங்கவயல் நகரில் போலீசாரின் அனுமதி பெற்று 100-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்து அமைப்பினர் விநாயகர் சிலைகள் வைத்திருந்தனர்.

மேலும் பெரும்பாலான இடங்களில் விநாயகர் சிலைகள் வைப்பதற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. அசம்பாவித சம்பவத்தை தடுப்பதற்கே சிலைகள் வைக்க அனுமதி கொடுக்கவில்லை என போலீசார் கூறினர்.

தெருக்கள் மற்றும் முக்கிய இடங்களில் வைத்திருந்த விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. மேலும் அன்னதானமும் நடைபெற்றன.

ஆண்டர்சன் பேட்டை பழைய நம்பெருளாள் கோவில் அருகே அப்பகுதி இளைஞர்கள் சார்பில் பிரமாண்டான விநாயகர் சிலைகளை வைத்திருந்தனர். அந்த சிலைக்கு சிறப்பு பூஜை செய்து அப்பகுதி மக்கள் வழிபாடு செய்தனர்.

பின்னர் அந்த விநாயகர் சிலை வாகனத்தில் ஏற்றப்பட்டு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு மாரிக்குப்பம் ஏரியில் சிலையை கரைத்தனர். அசம்பாவித சம்பவம் ஏற்படும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்