அபுதாபியில் இருந்து மங்களூருவுக்கு விமானத்தில் கடத்திய 1 கிலோ தங்கம் பறிமுதல்

அபுதாபியில் இருந்து மங்களூருவுக்கு விமானத்தில் கடத்திய 1 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-10-11 18:45 GMT

மங்களூரு-

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே பஜ்பேவில் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து பெங்களூரு, சென்னை, சிவமொக்கா, கோழிக்கோடு மற்றும் துபாய், மஸ்கட், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில், கடந்த சில மாதங்களாக விமான நிலையத்தில் கடத்தல் சம்பவம் அதிகரித்து வருகிறது.

அபுதாபியில் இருந்து மங்களூரு விமான நிலையத்திற்கு விமானம் ஒன்று வந்தது. அதில், வந்திறங்கிய பயணிகளை சுங்கவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒரு பயணியின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை சுங்கவரித்துறை அதிகாரிகள் தனியாக அழைத்து சென்று சோதனை செய்தனர்.

அப்போது அந்த நபர் 1 கிலோ தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த தங்கத்தை அவர் பேஸ்ட்டாக மாற்றி கடத்தி வந்துள்ளார். சுங்கவரித்துறை அதிகாரிகள் தங்கத்தை பறிமுதல் செய்து அந்த நபரை பஜ்பே போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்