தாவணகெரே அருகே முஸ்லிம் இல்லாத ஊரில் முகரம் பண்டிகை கொண்டாடும் இந்துக்கள்

தாவணகெரேவில் முஸ்லிம் இல்லாத ஊரில் இந்துக்கள் முகரம் பண்டிகையை கொண்டாடினர்.

Update: 2022-08-09 17:24 GMT

சிக்கமகளூரு:

தாவணகெரே மாவட்டம் மாயக்கொண்டா அருகே தொட்ட மாகடி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் தர்கா ஒன்று உள்ளது. சுமார் 50 ஆண்டுக்கு முன்பு தொட்டமாகடி கிராமத்தில் முஸ்லிம் சமுதாயத்தினர் வசித்து வந்தனர். இதனால் அவர்கள், ஆண்டுதோறும் முகரம் பண்டிகை கொண்டாடி வந்தனர். ஆனால் ஆண்டுகள் செல்ல முஸ்லிம் சமுதாயத்தினர் வேலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வெளியூருக்கு புலம் பெயர்ந்துவிட்டனர்.

தற்போது தொட்டமாகடி கிராமம், முஸ்லிம் இல்லாத ஊராக இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் கொண்டாடி வந்த முகரம் பண்டிகையை இந்துக்கள் ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர். அதன்படி முகரம் பண்டிகையையொட்டி வரும் அமாவாசை முதல் 9 நாட்கள் விரதம் இருந்து முகரம் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். மேலும் முகரம் பண்டிகையன்று தீமிதி திருவிழா நடத்துவார்கள். அதன்படி நேற்று தொட்டமாகடி கிராமத்தில் முகரம் பண்டிகையையொட்டி தீமிதி திருவிழா நடந்தது. இதில் கிராம மக்கள் பங்கேற்று சிலர் தீமிதித்தனர். முஸ்லிம்கள் இல்லாமல் இருத்தாலும் இந்துக்கள் அனைவரும் முகரம் பண்டிகை கொண்டாடி வருவது மதநல்லிணக்கத்தை வெளிபடுத்தி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்