வருமான வரித்துறை பெயரை கூறி மிரட்டி நவிமும்பையை சேர்ந்தவரிடம் ரூ.21 லட்சம் பறிப்பு; சென்னையை சேர்ந்தவர் கைது

வருமான வரித்துறை பெயரை கூறி மிரட்டி மும்பை நபரிடம் ரூ.21 லட்சம் மோசடியில் ஈடுபட்டவர் சென்னையில் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-10-20 18:45 GMT

மும்பை, 

வருமான வரித்துறை பெயரை கூறி மிரட்டி மும்பை நபரிடம் ரூ.21 லட்சம் மோசடியில் ஈடுபட்டவர் சென்னையில் கைது செய்யப்பட்டார்.

ரூ.21 லட்சம் மோசடி

நவிமும்பையை சேர்ந்த ஒருவருக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் ஒருவர் போன் செய்தார். அவர் உங்கள் வங்கி கணக்கில் பொிய அளவில் பணப்பரிமாற்றம் நடந்து இருப்பதால், நீங்கள் வருமான வரித்துறையினரின் விசாரணை வளையத்தில் இருப்பதாக கூறினார். மேலும் உங்கள் பெயரில் கனடாவுக்கு சட்டவிரோதமாக சில பார்சல்கள் அனுப்பப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். வருமான வரித்துறை கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க வேண்டும் எனில் தனக்கு பணம் தரவேண்டும் என போனில் பேசியவர் கூறினார். அவரின் மிரட்டலுக்கு பயந்து நவிமும்பையை சேர்ந்தவர் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ரூ.21 லட்சம் வரை அனுப்பினார். ஒரு கட்டத்தில் தான் ஏமாற்றப்படுவதை உணர்ந்த அவர் சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார்.

சென்னையில் கைது

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், நவிமும்பையை சேர்ந்தவரிடம் மோசடியில் ஈடுபட்டது சென்னை, அன்னனூர் பகுதியை சேர்ந்த லோகேஷ்குமார் என்பது தெரியவந்தது. இதையடுத்து சென்னை விரைந்த போலீசார் லோகேஷ் குமாரை கைது செய்தனர். மேலும் அவரது வங்கி கணக்குகளை முடக்கினர். அந்த வங்கி கணக்குகளில் ரூ.18 லட்சத்து 80 ஆயிரத்து 317 இருப்பதாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்