கலெக்டர் உத்தரவின் பேரில் இடிக்கப்பட்ட மீனவ சமுதாய தகன மேடையை மீண்டும் கட்டி கொடுக்க வேண்டும்- ஐகோர்ட்டு உத்தரவு

கலெக்டர் உத்தரவின் பேரில் இடிக்கப்பட்ட மீனவ சமுதாய தகன மேடையை மீண்டும் கட்டி கொடுக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Update: 2022-09-30 02:45 GMT

மும்பை,

கலெக்டர் உத்தரவின் பேரில் இடிக்கப்பட்ட மீனவ சமுதாய தகன மேடையை மீண்டும் கட்டி கொடுக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தகன மையம் இடிப்பு

மும்பை மலாடு இராங்கல் கடற்கரை பகுதியில் இருந்த மீனவ சமுதாயத்தினரின் தகன மேடை சமீபத்தில் புறநகர் கலெக்டர் உத்தரவின்பேரில் இடிக்கப்பட்டது. இதுதொடர்பான மனு மீதான விசாரணை மும்பை ஐகோர்ட்டில் நடந்து வந்தது.

மனுவை தலைமை நீதிபதி திபான்கர் தத்தா, நீதிபதி மாதவ் ஜாம்தர் அடங்கிய அமர்வு விசாரித்தது. விசாரணையில் கலெக்டர் நிதி சவுத்ரி உரிய வழிமுறைகளை பின்பற்றாமல் தகன மேடையை இடித்தது தெரியவந்தது.

கட்டிக்கொடுக்க உத்தரவு

இதையடுத்து நீதிபதிகள் ஒரு மாதத்துக்குள் சம்மந்தப்பட்ட இடத்தில் மீனவ சமுதாயத்தின் தகன மேடையை மீண்டும் கட்டி கொடுக்க உத்தரவிட்டார்.

மேலும் தகன மேடையை இடிப்பது தொடர்பாக பொதுநலன் மனுவை தாக்கல் செய்த சேத்தன் வியாசுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து, தகன மேடையை சீரமைக்க ஆகும் செலவையும் ஏற்க உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்