பிரதமர் மோடி நாட்டின் ஆன்மா; அவரை தோற்கடிக்க முடியாது- மந்திரி சுரேஷ் காதே கூறுகிறார்

பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் ஆன்மா. அவரை தோற்கடிக்க முடியாது என மந்திரி சுரேஷ் காதே கூறியுள்ளார்.;

Update:2022-09-11 20:03 IST

மும்பை,

பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் ஆன்மா. அவரை தோற்கடிக்க முடியாது என மந்திரி சுரேஷ் காதே கூறியுள்ளார்.

தேசியவாத காங்கிரஸ்

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெயந்த் பாட்டீல் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், மராட்டியத்தின் பாராமதி தொகுதியில் தங்களின் கட்சி தலைவர் சரத்பவார் மற்றும் அவர்கள் உறவினர்களை தோற்கடிக்க முடியாது என்று கூறினார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "சூரியன் மேற்கில் உதிக்கலாம், ஆனால் சரத்பவாரின் சொந்த மண்ணான பாராமதியில் பாவருக்கு தோல்வி சாத்தியமில்லை" என்றார்.

இந்த நிலையில் ஜெயந்த் பாட்டில் கூறியது குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த மாநில மந்திரி சுரேஷ் காதே கூறியதாவது:-

இந்தியாவின் ஆன்மா

பிரதமர் நரேந்திர மோடி இந்த நாட்டின் ஆன்மா. அவர் தோற்கடிக்க முடியாதவர். முன்னாள் பிரதமர்கள் அடல் பிகாரி வாஜ்பாய் மற்றும் இந்திரா காந்தி ஆகியோர் அவர்கள் காலத்தில் தேர்தலில் தோல்வி அடைந்தனர். ஆனால் பிரதமர் நரேந்திர மோடி ஒருபோதும் தோற்கமாட்டார்.

பாரதிய ஜனதா கட்சி தலைவர் எல்.கே. அத்வானியும் தேர்தலில் தோல்வி அடைத்ததாக அவர் கூற முயல்கிறார். ஆனால் 1977-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை அவர் போட்டியிட்ட அனைத்து தேர்தலிலும் வெற்றி பெற்றிருப்பதால் அவர் கூறியது உண்மையான தகவல் இல்லை. 2019-ம் ஆண்டு பொது தேர்தலில் அவர் போட்டியிடவில்லை.

அரசியல் வெற்றி தோல்வியை வாக்காளர்கள் தான் தீர்மானிக்கிறார்கள், இதுபோன்ற பேச்சுகளில் பெரிய அர்த்தமில்லை.

இருப்பினும் மோடி இந்தியாவின் ஆன்மா. அவர் மக்களின் இதயங்களில் இருக்கிறார். அவரை தோற்கடிக்க முடியாது.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்