தாராப்பூர் மருந்து தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி தொழிலாளி பலி- 4 பேருக்கு சிகிச்சை

தாராப்பூர் மருந்து தொழிற்சாலையில் விஷவாயு கசிவு ஏற்பட்டு தொழிலாளி ஒருவர் பலியானார். மற்ற 4 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.;

Update:2022-09-04 17:47 IST

வசாய், 

தாராப்பூர் மருந்து தொழிற்சாலையில் விஷவாயு கசிவு ஏற்பட்டு தொழிலாளி ஒருவர் பலியானார். மற்ற 4 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விஷவாயு கசிவு

பால்கர் மாவட்டம் தாராப்பூர் எம்.ஐ.டி.சி. பகுதியில் மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் இன்று காலை 7 மணி அளவில் வழக்கம் போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, ரசாயன பிரிவில் இருந்த குழாயில் திடீரென கியாஸ் கசிவு ஏற்பட்டது. இதனை சுவாசித்த அங்கிருந்த 5 தொழிலாளர்கள் ஒன்றன்பின் ஒன்றாக மயங்கி விழுந்தனர்.

இது பற்றி அறிந்த தொழிற்சாலையில் இருந்த மற்ற ஊழியர்கள் உடனடியாக 5 பேரையும் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

ஒருவர் பலி

தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் முகக்கவசம் அணிந்து கசிவு ஏற்பட்ட இடத்தில் சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட தொழிலாளி ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். மற்ற 4 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து பலியான தொழிலாளியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பலியானவர் பகவத் சவுபால் (வயது22) என்பது தெரியவந்தது. விபத்திற்கான காரணம் குறித்து தொழிற்சாலையில் ஆய்வு நடத்தி விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்