பழைய டயர்களில் அசத்தல் அழகு அலங்காரங்கள்

இந்தியாவில் தினமும் சுமார் 6 லட்சத்து 50 ஆயிரம் டயர்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதேவேளையில் ஒவ்வொரு நாளும் 2 லட்சத்து 75 ஆயிரம் டயர்கள் குப்பைக்கு செல்கின்றன. இவை அனைத்தும் மறுசுழற்சி செய்யப்படுவதில்லை.;

Update:2022-01-04 13:39 IST









ஒரு வாகனத்தில் பயன்படுத்தப்பட்டு தேய்ந்து போன டயர்களை மீண்டும் உபயோகப்படுத்த முடியாது என்றாலும் அவற்றை வெவ்வேறு வழிகளில் மறுசுழற்சி செய்து பயன்படுத்தலாம். தோட்டக்கலை முதல் விளையாட்டு வரை பல்வேறு வடிவங்களில் மாற்றலாம். பழைய டயர்களை கொண்டு வீட்டையும் அழகுபடுத்தலாம்.

பழைய டயர்களை சுற்றுச்சூழலுக்கு பாதகமின்றி பயனுள்ள வகையில் அலங்கரித்து அழகு படுத்தி பார்க்கும் தோட்டக்கலை ஆர்வலர்களில் ஹரியானா மாநிலம் சோனேபட்டைச் சேர்ந்த ராஜேந்திர சிங்கும் ஒருவர். மொட்டை மாடியில் விதவிதமான செடிகளை வளர்த்து வரும் இவர், தேய்ந்து போன பழைய டயர்கள் உள்ளிட்ட கழிவுப்பொருட்களை பயன்படுத்தி தனது மாடி தோட்டத்தை கட்டமைத்திருக்கிறார்.

பழைய டயர்களை எந்தந்த வழிகளில் எல்லாம் பயன்படுத்தலாம் என்பதை காட்சிப்படுத்தும் புகைப்பட தொகுப்பு இது.

மேலும் செய்திகள்