5 கோடி பேர் பஞ்சத்தை எதிர்நோக்கியுள்ளனர்... உலக தலைவர்களுக்கு வந்த திடீர் கடிதம்

பட்டினி காரணமாக உலகில் நான்கு விநாடிகளுக்கு ஒருவர் உயிரிழப்பதாக 238 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளன.

Update: 2022-09-22 09:21 GMT

ஐநா பொது அவையில் கூடியுள்ள உலக நாடுகளின் தலைவர்களுக்கு 78 நாடுகளை சேர்ந்த 238 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கூட்டாக ஒரு திறந்த கடிதத்தை அனுப்பியுள்ளன.

அந்த கடிதத்தில் சுமார் 34.5 கோடி பேர் உலக அளவில் பட்டினியை எதிர்கொண்டுள்ளதாகவும், இவர்களின் எண்ணிக்கை 2019ல் இருந்ததை விட தற்போது இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டு உள்ளது.

21ம் நூற்றாண்டில் பஞ்சம் ஏற்படாமல் தடுப்போம் என்று உலக தலைவர்கள் உறுதியளித்துள்ள நிலையில், சோமாளியாவில் பஞ்சம் ஏற்படும் நிலை உருவாகும் என கூறியுள்ளனர். உலகின் 45 நாடுகளில் சுமார் 5 கோடி பேர் பஞ்சத்தை எதிர்நோக்கியுள்ளனர் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

உலகெங்கும் சுமார் 19 ஆயிரம் பேர் பட்டினியால் உயிரிழக்கின்றனர் என்று கூறும் இந்த கூட்டமைப்பு, நான்கு வினாடிகளில் ஒருவர் உயிரிழப்பதாகவும் கூறியுள்ளது. கொரோனா காலத்தின் நீண்டகால விளைவுகள் மற்றும் உக்ரைன் போரினால் உணவுப்பொருட்களின் விலையேற்றம் ஆகியவை இதை மேலும் அதிகரிப்பதாக கூறியுள்ளனர்.

பணபலம் மற்றும் அதிகாரம் கொண்ட நாடுகள் இதை தீர்க்க விரைந்து செயல்பட வேண்டும் எனவும், எதிர்காலத்தில் இத்தகைய விளைவுகள் ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்