ஓசோனை பாதுகாப்போம்
சூரியனில் இருந்து வெளிப்படும் அதிகப்படியான புற ஊதா கதிர்வீச்சுகளில் இருந்து மனிதர்கள் உள்பட அனைத்து உயிரினங்களையும் பாதுகாக்கும் மகத்தான பணியை ஓசோன் மேற்கொள்கிறது.;
ஓசோன் படலத்தில் ஏற்பட்டு வரும் பாதிப்புகள் பூமிக்கு அச்சுறுத்தலை அதிகப்படுத்திக்கொண்டிருக்கின்றன. ஓசோன் படலத்தில் முதல் துளை ஏற்பட்டது 1985-ம் ஆண்டு மே மாதம் கண்டுபிடிக்கப்பட்டது. 37 ஆண்டுகள் கடந்த நிலையில் ஓசோன் படலத்தில் நாளுக்கு நாள் பாதிப்புகள் அதிகமாகிக்கொண்டிருக்கிறது. ஓசோனில் ஏற்பட்டிருக்கும் சிதைவு கிரீன்ஹவுஸ் விளைவுக்கு வழிவகுத்துவிட்டது. இதன் விளைவாக புவி வெப்பமடைகிறது.
ஓசோனைப் பாதுகாக்க, புகையை வெளிப்படுத்தும் எரிபொருட்களின் பயன்பாட்டை குறைக்க வேண்டும். வீடுகளில் மின் சாதனங்களின் பயன்பாட்டையும் முடிந்தவரை குறைக்க வேண்டும்.
ஓசோன் சிதைவுக்கு கார்பனும் முக்கிய காரணங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. நாம் எவ்வளவு குறைவான கார்பனை பயன்படுத்துகிறோமோ, அந்த அளவுக்கு ஓசோன் படலத்திற்கு பாதுகாப்பு கிடைக்கும்.
சூரியனில் இருந்து வரும் கதிர்வீச்சின் ஒரு பகுதியை ஓசோன் படலம் உறிஞ்சி, அது பூமியின் மேற்பரப்பை நெருங்கவிடாமல் தடுக்கிறது.
தோல் புற்றுநோய், கண்புரை மற்றும் கடல்வாழ் உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்கும் யூ.வி.பி எனப்படும் புற ஊதாக்கதர் வீச்சு ஒளியின் ஒரு பகுதியை ஓசோன் அடுக்கு உறிஞ்சுகிறது. மேலும் ஓசோன் படலம் சுமார் 97 முதல் 99 சதவீதம் புற ஊதா கதிர்களை உறிஞ்சி ஆக்ஸிஜன் சுழற்சியையும் பராமரிக்கிறது.
பூமியின் மேற்பரப்பில் இருந்து 17 கிலோமீட்டர்களுக்குள் சுமார் 90 சதவீத ஓசோன் காணப்படுகிறது. அதற்கு பாதிப்பு நேராமல் பாதுகாப்பதன் மூலமே ஆரோக்கியமான வாழ்க்கை சூழலில் பூமியில் நாம் வாழ முடியும்.