மன அழுத்தத்தை குறைக்கும் மலர்

‘பேஷன் பிளவர்’ செடியை ஆராய்ச்சி செய்த விஞ்ஞானிகள், பீட்டா கார்போலின், ஹெர்மலா அகாலாய்ட்ஸ் போன்ற ரசாயனங்கள் இதில் இருப்பதாகவும், இவை மன அழுத்தத்துக்கு எதிரான மருந்துகள் எனவும் தெரிவித்துள்ளனர்.;

Update:2023-01-29 20:20 IST

மலர்கள் மனிதர்களின் மனதைக் கவர்ந்திழுக்கும். ஆனால் மன எழுச்சியைத் தூண்டுமா?

தென் அமெரிக்காவில் காணப்படும் ஒரு வகை மலரின் பெயரே 'பேஷன் பிளவர்' (Passion Flower). ஆங்கிலத்தில் 'பேஷன்' என்றால், 'மன எழுச்சியைத் தூண்டக்கூடியது' என்று பொருள். 'பேஷனே' என்ற லத்தீன் மொழிச் சொல்லில் இருந்து 'பேஷன்' வந்தது.

வருடம் முழுவதும் பூத்துக் குலுங்கும் இந்த மலரின் இதழ்கள், மகரந்தங்கள், சூல், தண்டு, இலை என அனைத்துமே இளஞ்சிவப்பு, வெண்மை, இள நீலம்... என மென்மையான நிறங்களால் ஆனது. இது காண்போரைக் கவர்ந்திழுத்து மன எழுச்சியைத் தூண்டும் சிறப்பு கொண்டது.

இந்த மலரை அமெரிக்கப் பூர்வீக மக்கள் மிகவும் புனிதமாகப் போற்றி வருகிறார்கள். இந்த மன எழுச்சி மலர்ச் செடியின் இலைகளை உலர்த்தி அவர்கள் டீ தயாரிக்கின்றனர்.

தூக்கமின்மை, ஹிஸ்டீரியா உள்ளிட்ட பல மனப் பிரச்சினைகளை இது தீர்ப்பதாக அவர்கள் நம்புகின்றனர்.

நவீன காலத்தில் இச்செடியை ஆராய்ச்சி செய்த விஞ்ஞானிகள், பீட்டா கார்போலின், ஹெர்மலா அகாலாய்ட்ஸ் போன்ற ரசாயனங்கள் இதில் இருப்பதாகவும், இவை மன அழுத்தத்துக்கு எதிரான மருந்துகள் எனவும் தெரிவித்துள்ளனர்.

மொத்தத்தில், இயற்கை தந்த மனநல மருந்து இந்த மலர்!

Tags:    

மேலும் செய்திகள்