உலக சிங்க தினம்
சிங்கங்கள் தனக்குப் பசி எடுத்தால் மட்டுமே வேட்டையாடும் சிறப்பு குணம் கொண்டதால் இவை காட்டின் ராஜா என்று அழைக்கப்படுகிறது.;
வனவேந்தனை காப்பது நம் கடமை சிக்கல்களை கடந்து வாழ்வது என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல மற்ற உயிரினங்களுக்கும் தான். நம்மால் முடிந்தவரை மற்ற உயிரினங்களுக்கு தொல்லை தராமல் வாழ்வோம். அது உலக சிங்கங்கள் தினத்தில் இருந்து தொடங்குவோம் சிங்கங்கள் தனக்குப் பசி எடுத்தால் மட்டுமே வேட்டையாடும் சிறப்பு குணம் கொண்டதால் இவை காட்டின் ராஜா என்று அழைக்கப்படுகிறது. இதனை பெருமைப்படுத்தும் விதமாக ஆகஸ்டு 10-ந்தேதி உலக சிங்கங்கள் தினம் கொண்டாடப்படுகிறது. சிங்கத்திற்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த நிகழ்வை பிக் கேட் ரெஸ்க்யூ என்னும் அமைப்பு உருவாக்கியது. இந்நாளில் உலகின் பல இடங்களில் சிங்கங்களுக்கு மரியாதை செலுத்தப்படுகிறது. மனிதர்கள் நெடுங்காலமாக சிங்கங்களுடன் இருந்ததாக வரலாறு குறப்பிடுகிறது.
மனிதர்களும் சிங்கங்களும்:-
சிங்கங்கள் யூரேசியா வட தென் அமெரிக்கா வரை காணப்பட்டன. தற்போது சஹாரா பகுதிகளை ஒட்டிய ஆப்பிரிக்க நாடுகள் வட இந்தியாவில் மட்டுமே காணப்படுகின்றன. கிறிஸ்தவ புனித நூலான பைபிளில் 157 இடங்களில் சிங்கங்கள் பற்றிய குறிப்பு உள்ளன.
சிங்கங்களுக்கு சிக்கல்:-
சிங்கங்களின் வாழ்விடங்கள் அழிக்கப்படுவது உணவு கிடைக்காமல் போவது மனிதர்களால் ஏற்படும் பிரச்சினை ஆகியவையே தற்போது சிங்கங்களுக்கான தலையான சிக்கல்களாக உள்ளன. சிக்கல்களை கடந்து வாழ்வது என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல மற்ற உயிர்களும் தான். நம்மல் முடிந்தவரை மற்ற உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் வாழ்வோம் அதை உலக சிங்கங்கள் தினத்தில் இருந்து தொடங்குவோம்.