தொழிலாளி வீட்டிற்குள் புகுந்த பாம்பு

A snake entered the worker's house;

Update:2022-11-16 00:15 IST

போடி வ.உ.சி நகர் நடுத்தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். கூலித் தொழிலாளி. இவரது வீட்டில் நேற்று காலை பாம்பு ஒன்று புகுந்தது. இதை கண்ட வெங்கடேசன் போடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போடி தீயணைப்பு நிலைய அலுவலர் சக்திவேல் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சுமார் அரை மணி நேரம் போராடி சுமார் 5 அடி நீளமுள்ள கட்டுவிரியன் பாம்பை பிடித்தனர். பின்னர் அந்த பாம்பை அருகே உள்ள வனப்பகுதியில் விடப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்