இலங்கைக்கு கடத்த முயன்ற 1 டன் பீடி இலை பண்டல்கள்

இலங்கைக்கு கடத்துவதற்காக சரக்கு வாகனத்தில் கொண்டுவரப்பட்ட 1 டன் பீடி இலை பண்டல்கள் போலீசாரிடம் சிக்கின.

Update: 2023-05-27 18:45 GMT

பனைக்குளம், 

இலங்கைக்கு கடத்துவதற்காக சரக்கு வாகனத்தில் கொண்டுவரப்பட்ட 1 டன் பீடி இலை பண்டல்கள் போலீசாரிடம் சிக்கின.

சரக்கு வாகனம்

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே சீனியப்ப தர்கா கடற்கரையில் இருந்து இலங்கைக்கு சில பொருட்கள் கடத்தப்பட உள்ளதாக குற்ற நுண்ணறிவு பிரிவுக்கு தகவல் கிடைத்தது.

இதைதொடர்ந்து, ராமநாதபுரம் மாவட்ட குற்ற நுண்ணறிவு பிரிவு போலீசாரும், தனிப்பிரிவு போலீசாரும் இணைந்து நேற்று முன்தினம் இரவு, சீனியப்பா தர்கா கடற்கரை பகுதியில் கண்காணித்து வந்தனர்.

அப்போது அங்கு வந்த சரக்கு வாகனம் ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனை செய்ய முயன்றனர். ஆனால் அந்த வாகனத்தில் வந்த இருவரும் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

1 டன் பீடி இலைகள் பறிமுதல்

இதை தொடர்ந்து அந்த வாகனத்தை சோதனை செய்தபோது அதில் 35 பண்டல்களில் சுமார் ஒரு டன் பீடி இலைகள் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து அந்த சரக்கு வாகனத்தையும் அதில் இருந்த பீடிஇலைகள் அடங்கிய 35 பண்டல்களையும் கைப்பற்றிய போலீசார் மண்டபம் போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர்.

இது குறித்து போலீசார் கூறும் போது, ஆந்திராவில் பீடிஇலைகள் அதிகம் விளைவதால் அங்கிருந்துதான் இந்த பீடி இலைகள் பண்டல்களாக பேக்கிங் செய்து கொண்டு வரப்பட்டிருக்கலாம். இதனை இலங்கைக்கு கடத்த முயன்றுள்ளனர். இது தொடர்பாக காரைக்குடி மற்றும் மண்டபம் பகுதியைச் சேர்ந்த சிலரை தேடி வருகிறோம்" என்றனர். சிக்கியுள்ள பீடி இலைகளின் சர்வதேச மதிப்பு பல லட்ச ரூபாய் இருக்கும் எனவும் போலீசார் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்