சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களின் 10 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
சோளிங்கர் அருகே சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களின் 10 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் ெசய்யப்பட்டது.;
சோளிங்கர் சுற்றுவட்டார பகுதிகளில் சீட்டு வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக சோளிங்கர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சோளிங்கரை அடுத்த மோட்டூர் மற்றும் கொடைக்கல் ஆகிய பகுதிகளில் புதர் மறைவில் சிலர் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடிக்க முயன்றபோது, தப்பி ஓடிவிட்டனர்.
அவர்கள் விட்டுச்சென்ற 10-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து, சூதாட்டத்தில் ஈடுபட்ட நபர்களை தேடி வருகின்றனர்.