விநாயகர் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை

சாத்தான்குளம் கந்தசாமிபுரம் விநாயகர் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை நடந்தது.;

Update:2023-09-13 00:15 IST

தட்டார்மடம்:

சாத்தான்குளம் கந்தசாமிபுரம் பகுதியில் உள்ள செல்வ சக்தி விநாயகர் கோவிலில் போதிய பருவமழை வேண்டியும், ஊர் மக்கள் நலம் பெற வேண்டியும், 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் அதன் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டு, வழிபாடு நடத்தினர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் மழை பெய்ய வேண்டி சிறப்பு பூஜைகள் மற்றும் பஜனை நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கந்தசாமிபுரம் ஊர் மக்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்