12,000 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி-அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்

12,000 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்;

Update:2023-06-10 19:20 IST

சோளிங்கர்

12,000 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்டம் மருதாலம் கூட்ரோடு அருகே நெடுஞ்சாலை துறையின் சார்பில் நெடுஞ்சோலையோரம் 12 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்ட தொடக்கவிழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். மாவட்ட கவுன்சிலர் டி.கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் செல்வகுமார், ஒன்றிய குழு தலைவர் கலைக்குமார், துணை தலைவர் பூங்கொடி ஆனந்தன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நாகராஜ் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர் காந்தி கலந்து கொண்டு நெடுஞ்சோலையோரம் 12 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார். இதில் ஒன்றிய கவுன்சிலர்கள் மாரிமுத்து, சந்திரன், ஒன்றிய செயலாளர் சந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் அம்சவேணி பெரியசாமி, ஒன்றிய அவைத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்