நகை தயாரிப்பு நிறுவனத்தில் 1467 கிராம் தங்க கட்டிகள் அபேஸ்

கோவை தங்க நகை தயாரிப்பு நிறுவனத்தில் 1,467 கிராம் தங்க கட்டிகளை அபஸே் செய்ததாக நிறுவன ஊழியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.;

Update:2022-08-08 01:51 IST


கோவை தங்க நகை தயாரிப்பு நிறுவனத்தில் 1,467 கிராம் தங்க கட்டிகளை அபஸே் செய்ததாக நிறுவன ஊழியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது-

நகை தயாரிப்பு நிறுவனம்

கோவை சலீவன் வீதியில் தனியார் தங்க நகை தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் கோவை வீரகேரளம் பகுதியை சேர்ந்த ஜெகதீஷ் (வயது 34) என்பவர் மேற்பார்வையாளராக வேலை செய்து வந்தார். இந்த நிறுவனத்தில் இருந்து பிற நகை தயாரிப்பாளர்களுக்கு தங்கக் கட்டிகளை கொடுத்து பின்னர் அவற்றை நகைகளாக செய்து வாங்கி முத்திரை வைக்கும் பணிகளை ஜெகதீஷ் செய்து வந்தார்.

மேலும் நகைகளின் தரம் மற்றும் டிரேட் மார்க் பணிகளையும் செய்து வந்தார். சம்பவத்தன்று நிறுவனத்தின் கணக்குகளை மேலாளர் கார்த்திகேயன் என்பவர் சரிபார்த்தார்.

தங்க கட்டிகள் அபேஸ்

அப்போது கடந்த 6 மாதத்தில் கணக்கு வழக்குகளில் திருத்தம் செய்தும், கணினியில் உள்ள பதிவுகளில் மாற்றம் செய்தும் 1,467 கிராம் தங்க கட்டிகளை ஜெகதீஷ் அபேஸ் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கார்த்திகேயன் வெரைட்டிஹால் ரோடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் ஜெகதீஷ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்