திருச்சி மாவட்டத்திற்கு 30-ந் தேதி உள்ளூர் விடுமுறை

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது.;

Update:2025-12-23 19:49 IST

திருச்சி,

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா விமரிசையாக கொண்டாடப்படும். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி திருவிழாவானது கடந்த 20ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து 10 நாட்கள் பகல்பத்து உற்சவம் நடைபெற உள்ளது. அதன் பின்னர் இராப்பத்து திருவிழா நடைபெறுகிறது. மொத்தம் 21 நாட்கள் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் முக்கிய விழாவான சொர்க்கவாசல் திறப்பு எனப்படும் பரமபதவாசல் திறப்பு வரும் டிசம்பர் 30-ம் தேதி அதிகாலை 5.45 மணிக்கு நடைபெற உள்ளது.

இந்நிலையில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருச்சி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த விடுமுறையை ஈடுசெய்ய, ஜனவரி 24-ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக இருக்கும் என்றும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இந்த விடுமுறை நாளில் அரசு அனைத்து துணை கருவூலங்களும், மாவட்ட கருவூலமும் பாதுகாப்பாக குறைந்த பணியாளர்களைக் கொண்டு செயல்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.  

Tags:    

மேலும் செய்திகள்