காட்டு யானை தாக்கி மருத்துவமனையில் சிகிச்சை: பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்கு நிவாரணம் - மு.க.ஸ்டாலின் உத்தரவு
சிகிச்சை பெற்றுவருபவரின் மருத்துவச் செலவுகளை ஈடுசெய்யும் வகையில் நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது.;
சென்னை,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
ஈரோடு மாவட்டம், தாளவாடி வட்டம், எரகனஹள்ளி கிராமத்தில் வசித்துவரும் திரு.ஆள்மாதன் (வயது 60) என்பவர் கடந்த 13.12.2025 அன்று காலை சுமார் 7.00 மணியளவில் வீட்டிற்கு அருகே காட்டு யானை தாக்கியதில் படுகாயம் அடைந்து கர்நாடக மாநிலம், மைசூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்ற செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.
காட்டு யானை தாக்கியதில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஆள்மாதன் அவர்களுக்கு எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவர் விரைவில் நலம்பெற விழைகிறேன். மேலும், சிகிச்சை பெற்றுவருபவரின் மருத்துவச் செலவுகளை ஈடுசெய்யும் வகையில் அவரது குடும்பத்தினருக்கு ஒரு லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். என தெரிவித்தார்.