15 ஆயிரம் வாழைகள் முறிந்து சேதம்

சுல்தான்பேட்டையில் சூறாவளி காற்றுடன் பலத்த மழையால் 15 ஆயிரம் வாழைகள் முறிந்து சேதமடைந்தன.;

Update:2023-03-26 00:15 IST

சுல்தான்பேட்டை, 

சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் வதம்பச்சேரி, செஞ்சேரிப்புத்தூர், செஞ்சேரிமலை உள்ளிட்ட இடங்களில் 300 ஏக்கரில் வாழை சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் சுல்தான்பேட்டை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதற்கு தாக்குப்பிடிக்க முடியாமல் வதம்பச்சேரி, செஞ்சேரிப்புத்தூர் பகுதிகளில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்தும், சாய்ந்தும் சேதமடைந்தன. குறிப்பாக நேந்திரன் வாழை குலை தள்ளிய நிலையில் சேதமடைந்ததால், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டு உள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்த சுல்தான்பேட்டை வட்டார தோட்டக்கலைத்துறை உதவி அலுவலர்கள் சாய்கண்ணன், தினகரன் மற்றும் வதம்பச்சேரி, செஞ்சேரிப்புத்தூர் கிராம நிர்வாக அலுவலர்கள் மந்திராசளம், பிரசாந்த் ஆகியோர் நேரில் சென்று வாழை மரங்கள் சேதமடைந்ததை பார்வையிட்டனர். தொடர்ந்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பேரிடர் மேலாண்மையில் இருந்து நிவாரணம் வழங்க கலெக்டருக்கு தோட்டக்கலைத்துறை மூலம் அறிக்கை தயார் செய்யப்பட்டு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்