கலைஞர் அரசு போக்குவரத்து கழகம் என பெயர் மாற்ற திட்டமா ? எச்.ராஜா கண்டனம்
திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்தே கலைஞர் நினைவு பேருந்து நிலையம் என தமிழ் விரோத திராவிட மாடல் அரசு. பெயர் சூட்டி வருகிறது என தெரிவித்துள்ளார்.;
சென்னை,
பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
1996 ஆம் ஆண்டுக்கு முன்பு தமிழகத்தில் போக்குவரத்துக் கழகங்களின் பெயர் தமிழகத்தில் செங்கோலாட்சி நடத்திய மன்னர்களான சேரன், சோழன், பாண்டியன், பல்லவன் என மன்னர்களின் பெயர்களிலும், சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயர்களிலும், அரசியல் தலைவர்களின் பெயர்களிலும் இருந்தது.
அன்றைய தமிழக முதல்-அமைச்சரான மு.கருணாநிதி அவர்கள் மேற்குறிப்பிட்டுள்ள மன்னர்கள், சுதந்திர போராட்ட வீரர்கள், அரசியல் தலைவர்களின் பெயர்கள் அனைத்தையும் நீக்கிவிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் என பெயர் மாற்றினார்.
தற்போது மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் அரசு பேருந்துகளில் தமிழ்நாடு என்கிற பெயர் நீக்கப்பட்டு அரசு போக்குவரத்துக்கழகம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்தே தமிழகத்தில் கட்டப்படும் பேருந்து நிலையங்களுக்கு எல்லாம் கலைஞர் நூற்றாண்டு நினைவு பேருந்து நிலையம் என பெயர் சூட்டி வருகிறது தமிழ் விரோத திராவிட மாடல் அரசு.
அந்த வகையில், அந்த வரிசையில் பேருந்து நிலையங்களுக்கு கருணாநிதியின் பெயரை சூட்டியது போல போக்குவரத்து கழகத்திற்கும் "கலைஞர் அரசு போக்குரத்து கழகம்" என கருணாநிதி அவர்களின் பெயரை சூட்ட வேண்டும் என்பதற்கு முன்னோட்டமாகவும், முன்னேற்பாடாகவும் தான் அரசு பேருந்துகளில் இருந்து தமிழ்நாடு என்கிற பெயரை எந்த வித முன்னறிவிப்பும் இன்றி திராவிட மாடல் அரசு நீக்கி உள்ளதோ என்கிற சந்தேகம் எழுகிறது? .என தெரிவித்துள்ளார்.