பெண்ணிடம் 18 பவுன் சங்கிலி பறிப்பு

பெண்ணிடம் 18 பவுன் சங்கிலி பறிக்கப்பட்டது;

Update:2023-08-09 00:15 IST

காரைக்குடி

செட்டிநாடு போலீஸ் சரகம் கொத்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சிதம்பரம். இவரது மனைவி அழகம்மாள் (வயது 52). இவர் நேற்று கானாடுகாத்தானில் உள்ள காளி கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். அங்கு சாமி கும்பிட்டு விட்டு கானாடுகாத்தான் பஸ் நிறுத்தத்திற்கு வந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் அழகம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 18 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பினர். இதுகுறித்து அழகம்மாள் செட்டிநாடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்