பஸ்சில் 6 கிலோ கஞ்சா கடத்தி வந்த 2 பேர் கைது

Update:2023-06-14 22:29 IST


திருப்பூர் நல்லூர் போலீஸ் எல்லைக்குட்பட்ட கோவில்வழி பஸ் நிலையத்திற்கு பஸ்சில் கஞ்சா கடத்தி வருவதாக கிடைத்த ரகசியத்தகவலின்படி அங்கு போலீசார் விரைந்து சென்றனர். அப்போது திண்டுக்கல்லில் இருந்து கோவில்வழி பஸ் நிலையம் வந்த அரசு பஸ்சில் போலீசார் சோதனை செய்த போது 3 பார்சல்கள் இருந்தது. அதனை கொண்டு வந்த 2 பேரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். பார்சலை பிரித்து பார்த்த போது அதில் கஞ்சா இருப்பது தெரியவந்தது. போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் மதுரை விக்கிரமங்கலத்தை சேர்ந்த ஆனந்த் (வயது 30), சுமைதூக்கும் தொழிலாளி. மற்றொருவர் மதுரை மெயின் ரோட்டை சேர்ந்த ராஜாராம் (49), இவர் திருப்பூர் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருவதும் தெரியவந்தது. திண்டுக்கல்லில் இருந்து இருவரும் கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது. அவர்கள் கொண்டு வந்த 6 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்து 2 பேரையும் நல்லூர் போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்