‘இணைந்து நின்றால் வெற்றி சுலபமாக இருக்கும்’ - விஜய்க்கு தமிழிசை சவுந்தரராஜன் அறிவுரை
தேசிய ஜனநாயக கூட்டணியுடன் சேர்ந்து வருபவர்கள் வெற்றி பெறுவார்கள் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.;
சென்னை,
சென்னையில் தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
“தமிழக சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். தேசிய ஜனநாயக கூட்டணியுடன் சேர்ந்து வருபவர்கள் அனைவரும் வெற்றி பெறுவார்கள். நான் விஜய்க்கு சொல்லும் அறிவுரை ஒன்றுதான். தனியாக நிற்பதை விட அனைவரும் இணைந்து நின்றால் வெற்றி இன்னும் சுலபமாக இருக்கும். அது விஜய்க்கும் பொருந்தும் என்பதே எனது கருத்து.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.