மதுவிற்ற 2 பேர் கைது

மதுவிற்ற 2 பேர் கைது;

Update:2022-05-27 22:19 IST

சிவகிரி:

சிவகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அமிர்தராஜ் தலைமையில் போலீசார் சிவகிரி, கொத்தாடப்பட்டி, விசுவநாதப்பேரி, தருமாபுரி, ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது முருகன் (வயது 49) என்பவர் விசுவநாதப்பேரிக்கு மேற்கே மந்தையில் வைத்து மதுபாட்டில் விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரை கைது செய்தனர்.

இதேபோல் விசுவநாதப்பேரி- தர்மாபுரியைச் சேர்ந்த மணிகண்டன் (24) என்பவர் திரவுபதி அம்மன் கோவில் அருகே வைத்து மது பாட்டில்கள் விற்பனை செய்துவந்தது தெரியவந்தது. அவரையும் கைது செய்தனர். மொத்தம் 130 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்