கோவை
கோவை கெம்பட்டி காலனியை சேர்ந்தவர் அஜித்குமார் என்கிற தேவேந்திரகுமார் (வயது 27). இவர் தனது வீட்டில் பசுமாடுகளை வளர்த்து பால் விற்பனை செய்து வருகிறார். இந்த நிலையில் மேய்ச்சலுக்கு சென்ற ஒரு பசுமாட்டை காணவில்லை. இது குறித்த புகாரின்பேரில் செல்வபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
அதில் விருதுநகரை சேர்ந்த அழகுராஜ் (23), கோவை பனப்பட்டியை சேர்ந்த கிஷோர் (22) ஆகியோர் சேர்ந்து அந்த பசுமாட்டை திருடியது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ.30 ஆயிரம் ஆகும். அதன்பேரில் போலீசார் 2 பேரையும் கைது செய்ததுடன், அந்த பசுமாட்டையும் மீட்டனர்.