2 cows died due to electric shock

தக்கோலத்தில் மின்சாரம் தாக்கி 2 பசு மாடுகள் இறந்தன.;

Update:2023-09-19 00:09 IST

அரக்கோணத்தை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் தக்கோலம் பகுதியை சேர்ந்த ஜோதி (வயது 36) என்பவரது இரண்டு பசு மாடுகள் நேற்று வீட்டின் பின்புறத்தில் மேயந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு அறுந்து கிடந்த மின் கம்பியில் சிக்கியதில், மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே 2 மாடுகளும் இறந்தது.

இது குறித்து மின் வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்து மின்சாரம் தடை செய்யப்பட்டது. இது குறித்து தக்கோலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்