ரூ.2½ கோடி நிலம் மோசடி

ரூ.2½ கோடி நிலம் மோசடி மோசடி செய்யப்பட்டது;

Update:2023-08-04 01:15 IST


கோவை


சென்னை பாலவாக்கத்தை சேர்ந்த நாகேஷ் (வயது77) கோவை நகர குற்றப்பிரிவு போலீசில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:-


தனது சகோதரி கிருஷ்ணபிரியா வெளிநாட்டில் வசித்து வருகிறார். அவருக்கு சொந்தமான 10 ஏக்கர் விவசாய நிலம், திண்டுக்கல் மாவட்டம் சித்தரவு கிராமத்தில் உள்ளது.

அந்த நிலத்தை தனது சுகோதரர் சுரேஷ் (68) என்பவர், கோவையில் போலியாக பவர் பத்திரம் தயாரித்து, மற்றொரு சகோதரி ஜெயலட்சுமி என்பவருடன் சேர்ந்து அவரது பெயருக்கு பத்திரப்பதிவு செய்து கொண்டார். இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.


இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. இது தொடர்பாக சுரேஷ், ஜெயலட்சுமி ஆகியோர் மீது கோவை நகர குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மோசடி செய்யப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.2 கோடியே 50 லட்சம் ஆகும்.


மேலும் செய்திகள்