"ஜனநாயகன்" ரீ-மேக் படமா..? - இயக்குநர் ஹெச்.வினோத் கூறிய தகவல்

தளபதிக்கு என்ட்-டே கிடையாது, பிகினிங் மட்டும்தான் என்று இயக்குநர் ஹெச்.வினோத் தெரிவித்தார்.;

Update:2025-12-27 23:06 IST

சென்னை,

நடிகர் விஜய்யின் ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மலேசியாவில் நடந்தது. கோலாலம்பூரில் இருக்கும் புக்கீட் ஜலீல் ஸ்டேடியத்தில் மிக பிரம்மாண்டமாக இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் பங்கேற்றனர். இந்த விழாவிற்கு ரசிகர்கள் கரகோசத்துடன் நடிகர் விஜய் கோட் சூட் அணிந்தபடி வருகை தந்தார்.அதன்பின்னர் விஜய் ரேம்ப் வாக் மேடையில் ரசிகர்களை நோக்கி கை அசைத்தவாறு சென்றார்.

அப்போது ரசிகர்கள், டிவிகே, டிவிகே (Tamilaga Vettri Kazhagam, தமிழக வெற்றிக்கு கழகம்) என ஆர்ப்பரித்தனர். இதனை தொடர்ந்து ரசிகர்களை நோக்கி இங்கு 'டிவிகே' கோஷம் வேண்டாம் என விஜய் சைகை செய்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.

இந்நிலையில் ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் ஹெச்.வினோத் பேசியதாவது:-

ஜனநாயகன் படத்தின் கடைசி 20 நிமிடங்களில், விஜய் சாருடைய பேர்வல் வீடியோ இருக்கிறது, அழ வைக்க போகிறோம் என சிலர் சொல்கிறார்கள். அதெல்லாம் எதுவும் இல்லை. படத்தின் முடிவில் நம்பிக்கை மட்டும்தான் இருக்கிறது. ஏன் என்றால் தளபதிக்கு என்ட்-டே கிடையாது, பிகினிங் மட்டும்தான்.. ரெண்டே விஷயம் சொல்லி முடித்துக்கொள்கிறேன்.

ஜனநாயகன் எப்படி இருக்கும் என நிறைய பேருக்கு சந்தேகம் இருக்கிறது. ஒரு ரீமேக் படமாக இருக்குமா? இல்லை கொஞ்சம்தான் ரீமேக்கா என்ற குழப்பம் இருக்கிறது. ஒன்று மட்டும் சொல்கிறேன். ஐயா இது தளபதி படம். அதனால் உங்கள் மைண்டில் இருக்கும் டவுட் எல்லாத்தையும் அழித்துவிட்டு வாருங்கள். இது 100 சதவீதம் பொழுதுபோக்கான படம். ஆடி பாடி கொண்டாடவும் விஷயம் இருக்கு, அமைதியாக உக்கார்ந்து யோசிக்கவும் விஷயம் இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்