பொய்கை கால்நடை சந்தையில் ரூ.2 கோடிக்கு வர்த்தகம்

பொய்கை கால்நடை சந்தையில் ரூ.2 கோடிக்கு வர்த்தகம் நடந்தது.;

Update:2023-10-11 01:25 IST

அணைக்கட்டு

பொய்கை கால்நடை சந்தையில் ரூ.2 கோடிக்கு வர்த்தகம் நடந்தது.

வேலூரை அடுத்து பொய்கையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மிகப்பெரிய அளவில் கால்நடை சந்தை நடந்து வருகின்றது. இந்தச் சந்தைக்கு சென்னை, ஓசூர் புங்கனூர் வாணியம்பாடி ஆலங்காயம் திருவண்ணாமலை, சித்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் கறவை மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.நேற்று நடந்த சந்தைக்கு சுமார் 1500-க்கும் மேற்பட்ட கறவை மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தன.

இதனால் சுமார் ரூ.2 கோடிக்கு மேல் வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

இதனையடுத்து மாலையிலும் காய்கறி சந்தை விறுவிறுப்பாக இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்