கருமத்தம்பட்டி
கருமத்தம்பட்டி அருகே வேன் மோதி 2 பேர் பலியானார்கள்.
வேன் மோதியது
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி - அன்னூர் சாலையில் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் அவிநாசி தெக்கலூரை சேர்ந்த ரவிச்சந்திரன் (வயது52) மற்றும் அதே பகுதியை சேர்ந்த கந்தசாமி (60), செல்வராஜ் (62) ஆகிய 3 பேரும் ஒரு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்து உள்ளனர். அப்போது அவர்களுக்கு எதிரே வந்த வேன் எதிர்பாராத விதமாக அந்த இருசக்கர வாகனத்தில் மோதியது.இதில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த ரவிச்சந்திரன் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். மற்ற 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.
2 பேர் பலி
இதனை பார்த்த அக்கம், பக்கத்தினர் ஓடிவந்து இருவரையும் மீட்டனர். கந்தசாமியை அன்னூர் அரசு மருத்துவமனையிலும், செல்வராஜை கோவை அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் அவர்கள் பலனின்றி உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.