கிணத்துக்கடவு அருகே பரபரப்பு-அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றிச்சென்ற 2 லாரிகளை பொதுமக்கள் சிறைபிடிப்பு
கிணத்துக்கடவு அருகே அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றிச்சென்ற 2 லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.;
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு அருகே அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றிச்சென்ற 2 லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
லாரிகள் சிறைபிடிப்பு
கிணத்துக்கடவு பகுதியில் உள்ள கல் கல்குவாரிகளிலிருந்து அளவுக்கு அதிகமாக கல் லோடு ஏற்றி அருகிலுள்ள கேரளா மாநிலங்களுக்கும் கொண்டு செல்லப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர். இதுகுறித்து ஏற்கனவே பொதுமக்கள், விவசாயிகள் கனிமவளத் துறையினருக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை இலலை.
இந்தநிலையில், நேற்று கிணத்துக்கடவு அருகே உள்ள நெம்பர்.10. முத்தூர் பகுதியில் வன்னி குமாரசாமி கோவில் அருகில் 2 லாரிகள் அளவுக்கு அதிகமாக கல்லோடுகளை ஏற்றி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள், விவசாயிகள் ஒன்று திரண்டு லாரிகளை சிறை பிடித்தனர். இதனால் அஙகு பரபரப்பான நிலை நிலவியது.
அபராதம் விதிப்பு
இதனையடுத்து 2 லாரிகளையும் பொதுமக்களே கிணத்துக்கடவு பழைய சோதனை சாவடி அருகில் உள்ள எடை சரிபார்க்கும் நிலையத்தில் எடை போட்டபோது இரண்டு லாரிகளிலும் அளவுக்கு அதிகமாக பாரம் இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் பொள்ளாச்சியில் இருந்து மோட்டார் வாகன ஆய்வாளர் கோகுலகிருஷ்ணன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அளவுக்கு அதிகமாக லாரியில் கல் லோடு ஏற்றி சென்ற 2 லாரிகளுக்கும் மொத்தம் 96 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார். இதனை அடுத்து பொதுமக்களும் விவசாயினும் அங்கிருந்து கலந்து சென்றனர்.
கிணத்துக்கடவு அருகே அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றிச்சென்ற 2 லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:- கிணத்துக்கடவு பகுதியில் உள்ள கல்குவாரிகளிலிருந்து அதிக அளவில் கனிம வளங்கள் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இதுகுறித்து கனிமவளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தால் விரைந்து நடவடிக்கை எடுப்பதில்லை. அதேபோல் தற்போது கனிமவளக் கடத்தலை தடுப்பதற்கு அரசு பறக்கும் படை அமைக்கப்பட்டு இருப்பதாகவும் அந்தப் பறக்கும் படையினர் கிணத்துக்கடவு பகுதியில் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும். அதேபோல் அவர்களிடம் புகார் தெரிவிக்க செல்போன் எண்ணையும் பறக்கும் படையினர் பொதுமக்களுக்கு தெரிவித்தால் கனிம வள கடத்தலை தடுப்பதற்கு ஏதுவாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.