வடமாநில வாலிபரை தாக்கிய 2 பேர் கைது

வடமாநில வாலிபரை தாக்கிய 2 பேர் கைது;

Update:2023-03-09 00:15 IST

கோவை

மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் பிரவேஷ் போரே (வயது32). இவர் கோவை சொக்கம்புதூரில் சொந்தமாக ஆட்டோ மொபைல் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் அவர் வழக்கம்போல் வியாபாரத்தை முடித்து கொண்டு கடையை பூட்டி விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். தடாகம் ரோடு முத்தண்ணன் குளம் அருகே சென்ற போது மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் தீர்ந்து விட்டதால் நின்று விட்டது.

இதனையடுத்து அவர் மோட்டார் சைக்கிளை தள்ளிக்கொண்டு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 வாலிபர்கள் கேலி செய்ததாக கூறப்படுகிறது. இதில் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த இருவரும் பிரவேஷ் போரேவை தாக்கி மிரட்டி விட்டு தப்பி சென்றனர். இது குறித்து பிரவேஷ் போரே ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் தடாகம் ரோடு ஏகேஎஸ் நகரை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் சந்தானம் (20) மற்றும் சேஷன் (20) தாக்கியது தெரியவந்தது. பின்னர் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்