தோஷம் கழிப்பதாக கூறி இளம்பெண்ணிடம் 10 பவுன் நகைகள் திருட்டு - சென்னையில் அதிர்ச்சி
கண்ணிமைக்கும் நேரத்தில் பையுடன் சேர்த்து வளையல்களை திருடர்கள் பறித்துச் சென்றுள்ளனர்.;
சென்னை,
சென்னை சவுகார்பேட்டை மின்ட் தெருவைச் சேர்ந்த இளம்பெண் தீபக்ஜெயின். இவர் ஜெயின் கோவிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, 2 நபர்கள் அவரை சந்தித்து பேசியுள்ளனர். அவர்கள் தீபக்ஜெயினுக்கு தோஷம் இருப்பதாக கூறி, மந்திரம் சொல்வதுபோல் அவர் மீது விபூதிபோன்ற பொருளை தூவியுள்ளனர்.
இதனால் அந்த பெண் லேசாக மயக்கம் ஏற்பட்ட நிலையில், அவர் அணிந்து இருந்த 10 பவுன் தங்க வளையல்களை கழற்றி கைப்பையில் வைக்குமாறு அந்த நபர்கள் கூறியுள்ளனர். தீபக்ஜெயின் வளையல்களை தனது கைப்பையில் வைத்தபோது, கண்ணிமைக்கும் நேரத்தில் பையுடன் சேர்த்து வளையல்களை திருடர்கள் பறித்துச் சென்றுள்ளனர். இது தொடர்பாக தீபக்ஜெயின் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.