ஆடு திருடிய 2 பேர் கைது
தூத்துக்குடியில் ஆடு திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.;
தூத்துக்குடி லெவிஞ்சிபுரத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது 52). இவர் ஆடு வளர்த்து வருகிறார். இவரது ஆடுகள் அந்த பகுதியில் கடந்த 31-ந் தேதி மேய்ந்து கொண்டு இருந்தன. அவற்றை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இதுகுறித்து கண்ணன் தூத்துக்குடி தென்பாகம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். மேலும் அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் ஆடுகளை திருடியது, தூத்துக்குடி ராஜபாண்டி நகர் பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் முருகன் (29), சின்னதுரை (42) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, ரூ.15 ஆயிரம் மதிப்பிலான ஆடுகள் மீட்கப்பட்டன.