கிறிஸ்துமஸ் பண்டிகை: சிறப்பு பேருந்துகள் இயக்கம்

அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் டிச. 23, 24 ஆகிய தேதிகளில் சென்னையில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.;

Update:2025-12-21 19:25 IST

சென்னை,

வார இறுதி நாள்களையொட்டி மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக, 891 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

இதன்படி டிசம்பர் 23, 24, 25 ஆகிய தேதிகளில் சென்னை மற்றும் பிற பகுதிகளில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. கிளாம்பாக்கத்தில் இருந்து திருச்சி, கும்பகோணம், சேலம், நெல்லை, மதுரைக்கு டிசம்பர் 23, 34 ஆகிய தேதிகளில் 780 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இதேபோன்று கோயம்பேட்டில் இருந்து 91 சிறப்புப் பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 20 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்