குளத்தில் மண் திருடிய 2 பேர் கைது

களக்காடு அருகே குளத்தில் மண் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2023-06-22 00:32 IST

களக்காடு:

களக்காடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி மற்றும் போலீசார் கடம்போடுவாழ்வு குளம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது களக்காடு கீழத்தெருவை சேர்ந்த நம்பிராஜன் மகன் சதீஸ் (வயது 25), சுப்பிரமணியபுரம் வடக்குத் தெருவை சேர்ந்த விவேகானந்தன் மகன் பாலதுளசி (34) ஆகியோர் பொக்லைன் எந்திரத்தின் மூலம் எந்தவித அனுமதியும் இன்றி மண்ணை திருடி வயல் வரப்பில் வைத்து கொண்டிருந்தனர். போலீசாரை பார்த்ததும் இருவரும் தப்பி ஓடினர். எனினும் போலீசார் இருவரையும் பிடித்து கைது செய்தனர். மண் திருட்டுக்கு பயன்படுத்திய பொக்லைன் எந்திரத்தையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்