பிரதமர் மோடியுடன், பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் சந்திப்பு

முதல்-மந்திரியாக பொறுப்பேற்ற பின்பு முதல் முறையாக நிதிஷ்குமார் 2 நாட்கள் பயணமாக டெல்லி சென்றார்.;

Update:2025-12-23 02:04 IST

புதுடெல்லி

பீகாரில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜனதா கூட்டணி அமோக வெற்றி பெற்று முதல்-மந்திரியாக நிதிஷ்குமார் பொறுப்பேற்றுக்கொண்டார். பா.ஜனதா கட்சியைச் சேர்ந்தவர் 14 பேர், ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த 9 பேர், கூட்டணியில் இடம்பெற்றுள்ள இதர கட்சிகளைச் சேர்ந்த 4 பேர் என 27 பேர் நிதிஷ்குமார் தலைமையிலான மந்திரிசபையில் இடம்பெற்றுள்ளனர்.

முதல்-மந்திரியாக பொறுப்பேற்ற பின்பு முதல் முறையாக நிதிஷ்குமார் 2 நாட்கள் பயணமாக டெல்லி சென்றார். பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரை நிதிஷ்குமார் நேற்று தனித்தனியாக சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது பீகார் துணை முதல்-மந்திரி சாம்ராட் சவுத்ரி, மத்திய மந்திரி ராஜீவ் ரஞ்சன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இந்த சந்திப்பின் போது பீகார் மாநிலத்தின் பல்வேறு பிரச்சினைகள், மாநிலத்தின் வளர்ச்சி, அரசியல் நிலவரம், மந்திரிசபை விரிவாக்கம் மற்றும் அம்மாநிலத்தில் காலியாக உள்ள 5 மாநிலங்களவை எம்.பி. பதவியிடம் குறித்து பேசியதாக கூறப்படுகிறது. இதற்கிடையே பயணத்தை முடித்துக்கொண்ட நிதிஷ்குமார் நேற்று மாலை பாட்னா திரும்பினார்.

Tags:    

மேலும் செய்திகள்