வானூர் அருகே தொழிலாளி கொலை வழக்கில் 2 பேர் கைது

வானூர் அருகே தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.;

Update:2023-10-03 00:15 IST

வானூர், 

குத்திக்கொலை

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே அச்சரம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் முரளிதாஸ் (வயது 38). கூலித்தொழிலாளி. இவருக்கும், மரக்காணம் அருகே உள்ள பழமுக்கல் பகுதியைச் சேர்ந்த பாபு (32) என்பவருக்கும் பணம் கொடுக்கல்-வாங்கல் பிரச்சினை இருந்து வந்தது.

இந்தநிலையில் கடந்த 30-ந்தேதி அச்சரம்பட்டு ஏரிக்கரையில் நின்று கொண்டிருந்த முரளிதாசை, பாபு மற்றும் அவரது கூட்டாளி புதுவை கோரிமேடு காமராஜ் நகரை சேர்ந்த ஜெகன் (35) ஆகியோர் சேர்ந்து கத்தியால் வெட்டி விட்டு தப்பி சென்றனர். இதில் பலத்த காயமடைந்த முரளிதாஸ் சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

சிறையில் அடைப்பு

இதுகுறித்து ஆரோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெகனை நேற்று முன்தினம் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருந்த பாபுவை வலைவீசி தேடி வந்தனர். இதற்கிடையே சென்னையில் பதுங்கி இருந்த பாபுவை நேற்று போலீசார் கைது செய்தனர். பின்னர் 2 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்