வீட்டின் பூட்டை உடைத்து திருடிய 2 பேர் கைது

கோவில்பாளையத்தில் வீட்டின் பூட்டை உடைத்து திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update:2022-11-08 00:15 IST

கோவில்பாளையம்

கோவை எஸ்.எஸ் குளம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீரணத்தம் ஊராட்சி சைபர் சிட்டி பகுதியை சேர்ந்தவர் தேவசகாயம் (வயது 65). இவர் சம்பவத்தன்று காலை வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சாய்பாபா காலனியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்திற்கு சென்றார். பின்னர் அங்கிருந்து மதியம் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டை உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. மேலும் பீரோவில் இருந்த 2 பவுன் நகை திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து அவர் கோவில்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் கோவில்பாளையம் போலீசார் கீரணத்தம் சாலை கல்லுக்குழி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த வழியாக வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த சுபாஷ் (வயது 25), உக்கடத்தை சேர்ந்த ஜெகன் என்பதும், இவர்கள் தான் தேவசகாயம் வீட்டில் திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் திருடிய 2 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்