மாநில தேர்தல் ஆணையர் பதவி காலி: என்னாகும் உள்ளாட்சி தேர்தல்?

தமிழகத்தின் மாநில தேர்தல் ஆணையர் சீதாராமனின் பதவிக்காலம் முடிந்துள்ளாதால், அவர் வகித்த பதவி காலியாகியுள்ளது உள்ளாட்சித் தேர்தல் நடத்த புதி சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2017-04-04 06:10 GMT
சென்னை:


உள்ளாட்சித் தேர்தலை மே 14ஆம் தேதிக்குள் நடத்த வேண்டும் என்று தமிழக தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், மேலும் கால அவகாசம் கேட்டு தேர்தல் ஆணையம் சார்பில் மனுச்செய்யப்பட்டது.

‘உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மீண்டும் மீண்டும் பதில் மனுக்கள் தாக்கல் செய்து இந்த ஐகோர்ட்டின் நேரம் வீணடிக்கப்படுகிறது. மாநில அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணையத்தின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் ஐகோர்ட்டு உத்தரவிட்டுக் கொண்டே இருக்க முடியாது. ஏற்கனவே மே 14-ந் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டுமென டிவிசன் பெஞ்சு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்காவிட்டால் கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கையை சந்திக்க வேண்டியது வரும்’ என நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர். பின்னர் விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்..

இந்நிலையில், தேர்தல் ஆணையத்திற்கு கூடுதல் நெருக்கடியாக தேர்தல் ஆணையர் சீதாராமனின் பதவிக்காலம் முடிந்துள்ளது. இதனால், தமிழக தேர்தல் ஆணையர் பதவி காலியாக உள்ளது. இதனால், உள்ளாட்சித் தேர்தலை உரிய நேர்த்தில் நடத்துவதில் மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்