சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்தில் பயணிகள் சோதனை நேரம் குறைப்பு

நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் பயணிகளிடம் நீண்ட நேரம் சோதனை நடத்தப்படுவதால் காலதாமதம் ஏற்படுவதாகவும், சோதனை நேரத்தை குறைக்க வேண்டும் எனவும் பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

Update: 2017-04-25 20:22 GMT
ஆலந்தூர்,

முக்கிய விமான நிலையங்களில் சோதனை நேரத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய உள்நாட்டு முனையத்தில் பயணிகள் ‘போர்டிங் பாஸ்’ பெற 30 நிமிடங்கள் வரையும், உடைமைகளை சோதனை செய்ய 15 நிமிடங்கள் வரையும் தாமதம் ஏற்படுகிறது. இதனால் பயணிகளின் சிரமத்தை கருதி விமான நிலைய ஆணையகம், விமான போக்குவரத்து துறை இணைந்து சோதனைகளில் தளர்வு திட்டங்களை கொண்டு வந்துள்ளது.

இதன்படி இனிமேல் மீனம்பாக்கம் விமான நிலைய உள்நாட்டு முனையத்தில் பயணிகள் ‘போர்டிங் பாஸ்’ பெறுவதற் கான நேரம் 10 நிமிடங்களாகவும், உடைமைகளின் சோதனை நேரம் 5 நிமிடங்களாகவும் குறைக்கப்பட்டு உள்ளன.

“சோதனை நேரங்கள் குறைக் கப்பட்டதன் மூலம் பயணிகளின் சிரமம் வெகுவாக குறைக்கப்பட்டு உள்ளதாகவும், விரைவில் பன்னாட்டு முனையத்திலும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்” என்றும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்