ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் சொத்து ரத்த வாரிசுகளுக்கே சொந்தம்-டி.டி.வி.தினகரன்

ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் சொத்து ரத்த வாரிசுகளுக்கு மட்டுமே சொந்தமானது என டி.டி.வி.தினகரன் கூறி உள்ளார்.

Update: 2017-06-13 06:28 GMT
அ.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-

ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டுக்கு தீபா வந்ததும், அவரை யார் அழைத்து வந்தார் என்பதும் எனக்கு தெரியாது. டி.வி.சேனலில் வந்த செய்தியை பார்த்துதான் என்ன நடந்தது என்பதை நான் அறிந்தேன்.

ஜெயலலிதாவின் வீடான வேதா நிலையம் அமைந்துள்ள போயஸ் தோட்டம் எங்களுக்கு கோவில் போன்றது. ஜெயலலிதா நம் அனைவருக்கும் தெய்வம் போன்றவர். அவரது சொத்தை எடுத்து கொள்வதற்கு நான் யார்?

ஜெயலலிதாவின் வீட்டில் அவருடைய நேர்முக உதவியாளர் பூங்குன்றன் 40 ஆண்டுகளாக ஜெயலலிதாவுடன் இருந்த ராஜம் மற்றும் சிலரே உள்ளனர். சசிகலா சிறைக்கு சென்ற பிறகு ஒரே ஒரு தடவை மட்டும் நான் அங்கு சென்று வந்தேன். நான் ஏன் அந்த சொத்தை கைப்பற்ற வேண்டும். அந்த சொத்து ரத்த வாரிகளுக்கு மட்டுமே சொந்தமானது.

அப்படி இருக்க, தீபா என் மீது ஏன் புகார் தெரிவிக்கிறார் என்று தெரியவில்லை. ஜெயலலிதாவின் சட்டப் படியான வாரிசு என்பதை அவர் தெரிவித்து அந்த சொத்துக்களை எடுத்து கொள்ளலாம். இந்த விவகாரத்தில் எனக்கு எந்த பங்கும் இல்லை.  இவ்வாறு தினகரன் கூறினார்.

மேலும் செய்திகள்