போலீஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு, பதவி மாற்றம் சென்னையில் புதிய துணை கமிஷனர்கள் நியமனம்

சென்னையில் புதிய துணை கமிஷனர்களை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

Update: 2017-06-13 22:45 GMT
சென்னை,

தமிழகத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகளாக பணியாற்றிய 21 பேருக்கு சூப்பிரண்டுகளாக பதவி உயர்வு கொடுத்து கடந்த வாரம் அரசு உத்தரவிட்டது. அவர்களில் ஜி.ஸ்டாலின், டி.அசோக்குமார், ஆர்.பாண்டியராஜன், சி.சியாமளாதேவி, எம்.கிங்ஸ்லின், எஸ்.அரவிந்த் ஆகிய 6 பேருக்கும் நேற்று பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அவர்களோடு மேலும் 7 போலீஸ் சூப்பிரண்டுகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

சி.சியாமளாதேவி

1. ஜி.ஸ்டாலின் - சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்றுள்ளார். சென்னை (ஓ.சி.ஐ.யு) அமைப்பு சார்ந்த குற்றப்புலனாய்வு பிரிவு சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.

2. டி.அசோக்குமார் - சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்று, ராமநாதபுரம் கடலோர பாதுகாப்பு குழும சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.

3. ஆர்.பாண்டியராஜன்- சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்று, ஈரோடு சிறப்பு அதிரடி படைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

4. சி.சியாமளாதேவி - சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்றுள்ள இவர், சென்னை புளியந்தோப்பு துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

5. எம்.கிங்ஸ்லின் - இவரும் சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்றுள்ளார். சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறை துணை கமிஷனராக பொறுப்பு ஏற்பார்.

6. எஸ்.அரவிந்த் - சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்றுள்ள இவர், மாநில உளவுப்பிரிவின் (ஸ்பெஷல் டிவிஷன்) உளவுப்பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார்.

7. ஆர்.சக்திவேல் - மாநில உளவுப்பிரிவு (ஸ்பெஷல் டிவிஷன்) சூப்பிரண்டாக பணியாற்றிய இவர் திண்டுக்கல் மாவட்ட சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.

8. ஏ.சரவணன் - திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றும் இவர், மதுரை அமலாக்கப்பிரிவு சூப்பிரண்டாக மாற்றப்பட்டுள்ளார்.

டாக்டர் எம்.சுதாகர்

9. அனில்குமார் கிரி - அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருக்கும் இவர், சென்னை ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டாக பதவி ஏற்பார்.

10. டாக்டர் எம்.சுதாகர் - சென்னை புளியந்தோப்பு துணை கமிஷனராக பதவி வகிக்கும் இவர், இனிமேல் சென்னை அண்ணாநகர் துணை கமிஷனராக செயல்படுவார்.

11. கே.பெரோஸ் கான் அப்துல்லா - சென்னை அண்ணாநகர் துணை கமிஷனராக பணியாற்றும் இவர், திருநெல்வேலி குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து துணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.

12. எம்.சத்யபிரியா - தூத்துக்குடி போலீஸ் பயிற்சி பள்ளி முதல்வராக இருக்கும் இவர், சென்னை சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு போலீஸ் சூப்பிரண்டாக பதவி ஏற்பார்.

13. டாக்டர் அபினவ் குமார் - சென்னை வடக்கு போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனராக பணியாற்றுகிறார். இவர் அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக மாற்றப்பட்டுள்ளார்.

மேற்கண்டவாறு அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்