வெப்ப சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் இன்று மழை பெய்ய வாய்ப்பு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Update: 2017-07-01 21:30 GMT
சென்னை,

கர்நாடக மாநில கடலோர பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களிலும் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்து வருகிறது.

தமிழ்நாட்டில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரு சில இடங்களில் மழைபெய்ய வாய்ப்பு உள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்ப சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்த வரையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். மாலையோ அல்லது இரவிலோ நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் 4 சென்டி மீட்டர் மழை பெய்து உள்ளது. அறந்தாங்கி, அரிமளம் தலா 3 செ.மீ, வால்பாறை, காரைக்குடி தலா 1 சென்டி மீட்டர் மழை பதிவாகி இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்