காவிரியில் 7 டிஎம்சி தண்ணீரை உடனடியாக திறந்துவிட வேண்டும்: கர்நாடக முதலமைச்சருக்கு, முதலமைச்சர் பழனிசாமி கடிதம்

காவிரியில் 7 டிஎம்சி தண்ணீரை உடனடியாக திறந்துவிட வேண்டும் என்று கர்நாடக முதலமைச்சருக்கு, முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். #CauveryIssue | #EPS

Update: 2018-01-13 11:19 GMT
சென்னை,

தமிழக முதல் அமைச்சர்  எடப்பாடி பழனிச்சாமி கர்நாடக முதல் மந்திரி சித்தராமையாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் தமிழகத்தில் பயிர் பாசனத்திற்காக கர்நாடக அரசு குறைந்த பட்சம் 15 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என தெரிவித்துள்ளார். 

மேலும், டெல்டா விவசாயிகளின் நலனுக்காக கர்நாடகா உடனடியாக 7 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட வேண்டும் தமிழகத்துக்கான எஞ்சிய காவிரி நீரை 2 வாரங்களில் கர்நாடகா திறந்துவிட வேண்டும். மேட்டூர் அணையில் தற்போது இருக்கும் 21 டிஎம்சி தண்ணீர் விவசாய தேவைக்கும், குடிநீர் தேவைக்கும் போதுமானதாக இல்லை” என்று தனது கடிதத்தில் முதல் அமைச்சர் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். 

மேலும் செய்திகள்