4 மாதங்களாக 14 வயது சிறுவனிடம் ஓரின சேர்க்கை.. போக்சோ வழக்கில் கைதான வாலிபர்கள்

சிறுவனிடம், இதுபற்றி யாரிடமும் கூறக்கூடாது என்று அந்த வாலிபர்கள் கூறி இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update:2026-01-03 03:30 IST

பெரம்பூர்,

சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்தவர்கள் மொய்தீன் (வயது 27) மற்றும் ஜாபர் சாதிக் (25). இவர்கள் இருவரும் 8-ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுவனை தங்களது வீட்டுக்கு அழைத்துச்சென்று ஓரின சேர்க்கையில் ஈடுபட்டு வந்துள்ளனர். கடந்த 4 மாதங்களாக சிறுவனிடம் இதுபோல் ஈடுபட்டு வந்துள்ளனர்.

சிறுவனிடம், இதுபற்றி யாரிடமும் கூறக்கூடாது என்று கூறி அவ்வப்போது அவனுக்கு உணவு மற்றும் செல்போன் வாங்கி கொடுத்து, அவர்கள் சொல்வதை மட்டும் கேட்கும்படி செய்தனர். இதுபற்றி அறிந்த சிறுவனின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி அவர்கள் கொடுத்த புகாரின்பேரில் தண்டையார்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மொய்தீன், ஜாபர் சாதிக் ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்