உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பா..?

தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்ட பகுதிகள் உள்பட சில இடங்களில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது.;

Update:2026-01-03 02:52 IST

கோப்புப்படம்

சென்னை,

தமிழக பகுதிகளின் மேல் மற்றும் இலங்கை கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் காரணமாக தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்ட பகுதிகள் உள்பட சில இடங்களில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது.

இதன் தொடர்ச்சியாக இன்றும் (சனிக்கிழமை) மழைக்கான வாய்ப்பு மேற்சொன்ன பகுதிகளில் இருக்கும் எனவும், இதனையடுத்து வருகிற 9-ந் தேதி வரை தமிழ்நாட்டில் மழை குறைந்து, பகலில் வெப்பமும், இரவில் குளிரும் அதிகமாக இருக்கும் எனவும், இதனை பயன்படுத்தி விவசாயிகள் வேளாண் பணிகளில் ஈடுபடலாம் எனவும் தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் தெரிவித்தார்.

உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி

அதனைத் தொடர்ந்து வருகிற 10-ந் தேதி இலங்கையையொட்டி தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு இருக்கிறது என்றும், இந்த புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக வருகிற 10, 11, 12-ந் தேதிகளில் கடலோர, உள் மாவட்டங்களில் அனேக இடங்களிலும் என ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்யக்கூடும் என்றும் அவர் மேலும் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்